தமிழக அரசு சார்பில் 2016ம் ஆண்டுக்கான பெரியார், அம்பேத்கர் அண்ணா விருது அறிவிப்பு


தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

 1. திருவள்ளுவர் விருது 2016 - புலவர் பா.வீரமணி,
 2. பெரியார் விருது 2016 - பண்ருட்டி ராமச்சந்திரன்,
 3. அம்பேத்கர் விருது 2016 - மருத்துவர் இரா.துரைசாமி,
 4. அண்ணா விருது 2016- கவிஞர் கூரம் மு.துரை,
 5. காமராஜர் விருது 2016 - டி.நீலகண்டன்,
 6. பாரதியார் விருது 2016 - கணபதிராமன்,
 7. பாரதிதாசன் விருது 2016 - கவிஞர் கோ.பாரதி.
 8. திரு.வி.. விருது 2016 - மறைமலை இலக்குவனார்,
 9. கி..பெ. விசுவநாதம் விருது 2016 - மீனாட்சி முருகரத்தினம்

 ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் .பன்னீர்செல்வம் வழங்குகிறார். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இந்த விழாவில் அகவை முதிர்ந்த 50 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசாணைகள் வழங்கப்படும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்த பழைய கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டு, ரூ.63 கோடியில் புதிதாக கட்டப்பட்டது. புதிய கலைவாணர் அரங்கத்தை கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிதான் முதன் முதலாக நடத்த வேண்டும் என்று ஓராண்டாக அப்படியே கிடப்பில் போட்டிருந்தனர். தற்போது ஜெயலலிதா மறைந்ததையடுத்து புதிய முதல்வர் .பன்னீர்செல்வத்தை வைத்து நாளை விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TAMIL GK - பொது அறிவு - அறிவியல்


 • காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
 • அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
 • கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை
 • விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா
 • தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ
 • பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்
 • விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி
 • நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்
 • இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
 • ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி
 • தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்
 • எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்
 • ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்
 • விலங்குகளின்உடலைச் சுற்றி லுறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு
 • அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.
 • நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடைய்ல் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்
 • நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்
 • சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்
 • நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.
 • கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி
 • மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்
 • செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்
 • உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்
 • செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்
 • பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்
 • புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்
 • புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்
 • மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்
 • ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.
 • பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்
 • தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி மெலானின்
 • மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.
 • கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி - கரப்பான் பூச்சி
 • பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு - நீலத் திமிங்கலம்
 • செவுள்களால் சுவாசிப்பது - மீன்
 • மனிதன் ஒரு அனைத்து உண்ணியாவான்
 • யானை ஒரு தாவர உண்ணி
 • எம்ஃபைசிமா என்பது - சுவாச நோய்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி


பொது அறிவு | வினா வங்கி

1. இந்தியா நெதர்லாந்து அரசுடன் எந்த மாநிலத்தில் விவசாயிகளின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது?

2. பிராந்திய மொழிகளில் படிப்பதை ஊக்குவித்து மாதம் தோறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை அறிவித்துள்ள இந்திய மாநிலம் எது?

3. வீடற்றவர்களுக்கான 14-வது உலக கோப்பை கால்பந்து போட்டி (2016) எங்கு நடத்தப்பட்டது?

4. இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள நவீன டாங்கிகள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தி, யமுனா நதிக் கரைக்கும், மதுரா நதிக்கரைக்கும் இடையே போர் ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. அதன் பெயர் என்ன?

5. 2016- உலக இளைஞர்கள் திறமை தினத்தின் அடிப்படை நோக்கம் என்ன?.

6. சி.பி.எஸ்.சி. அமைப்பின் புதிய தலைவராக நியமனம் பெற்றவர் யார்?

7. துலுனி திருவிழா இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

8. திறமை மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள போட்டித் திட்டத்தின் பெயர் என்ன?

9. 2016 கிராண்ட் பிரிக்ஸ் செஸ் கோப்பையை வென்ற பெண் யார்?

விடைகள்:

1. உத்தரபிரதேசம், 2.கோவா மாநில அரசு, கொங்கணி மற்றும் மராத்தி மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.400 ஊக்கத் தொகை அறிவித்துள்ளது, 3. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவ் நகரில், 4. ஆபரேசன் மேக் பிரகார், 5. இளைஞர்களின் திறன் மேம்பாடு இந்த தினத்தின் அடிப்படையாகும். 2016-ல் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டது, 6. ராகேஷ் குமார் சதுர்வேதி, 7. நாகலாந்து, 8. இண்டியா ஸ்கில் காம்பெட்டிசன், 9. கரிகா டிரோனவல்லி

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் - அண்டை நாடுகள்


tnpsc நடப்பு நிகழ்வுகள் பகுதியில் *அண்டை நாடுகள்* என்ற பகுதிலிருந்து தேர்வுக்கு ஒரு கேள்வி கேட்கப்படும்..இதுவரை இந்த பகுதி கேள்விகள் மிகவும் கடுமையாகவே இருந்துள்ளன..ஒரு சில கேள்விகள்...

1..இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோடு?சர் ராட்கிளிப் எல்லைக்கோடு

2..இந்திய ஆப்கானிஸ்தான் எல்லைக் கோடு?தூரந் எல்லைக்கோடு

3..இந்திய இலங்கை எல்லைக் கோடு?AGLP (ஆதம்ஸ் பிரிட்ஜ் ,மன்னார் வளைகுடா,லட்சத்தீவுகள், பால்க் ஸ்ட்ரைட் )

4..இந்திய வங்காளதேசம் எல்லைக் கோடு?சிக்கன் நெக்

5..இந்திய நேபாளம் எல்லைக் கோடு?ரடோலிப்

6..ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் ?நேஷனல் அசெம்பிளி

7..சீனா பாராளுமன்றம் ?நேஷனல் காங்கிரஸ்.

8..நேபாளம் பாராளுமன்றம் ?நேஷனல் பஞ்சாயத்து

9..பாகிஸ்தான் பாராளுமன்றம் ?மஜ்லிஸ்--ஸீரா

10..பூடான் பாராளுமன்றம் ?சோக்டு

11..மாலத்தீவு பாராளுமன்றம் ?மஜ்லிஸ்

12..வங்காளதேசம் பாராளுமன்றம் ?ஜதியா சன்சத்

13..ஆப்கானிஸ்தான் தலைநகர்? நாணயம்?கபூல்...ஆப்கானி

14..இலங்கை தலைநகர்? நாணயம்?கொழும்பு..... ருப்பி

15..சீனா தலைநகர்? நாணயம்?பீஜிங் ...... யென்

16..நேபாளம் தலைநகர்? நாணயம்?காத்மாண்டு ...ருப்பி

17..பாகிஸ்தான் தலைநகர்? நாணயம்?இஸ்லாமாபாத் ....ருப்பி

18..பூடான் தலைநகர்? நாணயம்?திம்பு ....நகுல்ட்ரம்

19..மாலத்தீவு தலைநகர்? நாணயம்?மாலே .....ருபியா

20..மியான்மர் தலைநகர்? நாணயம்?நைபிடாவ்..... கயாத்

21..வங்களாதேசம் தலைநகர்? நாணயம்?டாக்கா ......டாக்கா

22..இந்தியாவுடன் நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் எத்தனை?7

23..இந்தியா மிக அதிக நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு?வங்காளதேசம்

24..இந்தியா மிக குறைந்த நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு?ஆப்கானிஸ்தான்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முக்கிய நிகழ்வு - டிசம்பர் 25- 31, 2016


கடந்து வந்த பாதை | டிசம்பர் 25- 31 |  போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
* ரொக்கமில்லா பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் 2 பரிசுத் திட்டங்களை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, வியா பாரிகளுக்கு வருமான வரிச் சலுகையையும் அறிவித்தார். (டிசம்பர் 25)
* பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் கட்டாயத் தேர்ச்சி முறை இருக்கக் கூடாது என்ற பரிந்துரைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. (டிசம்பர் 25)
* சபரிமலை அய்யப்பன் கோவிலில் தடுப்புக் கயிறு அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 20 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். (டிசம்பர் 25)
* எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைதான 220 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. (டிசம்பர் 25)
* சிரியாவுக்கு புறப்பட்டுச் சென்ற ரஷிய விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 92 பேரும் பலியாகினர். (டிசம்பர் 25)
* தமிழகத்தில் வருமானவரி சோதனைக்கு துணை ராணுவத்தைப் பயன்படுத்திய மத்திய அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்தது. (டிசம்பர் 26)
* ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில், 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. (டிசம்பர் 26)
* நாட்டை அழித்துவிட்ட ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடரும் என டேராடூனில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். (டிசம்பர் 27)
* சென்னையில் வருமான வரி சோதனைக்கு உள்ளான ராமமோகன ராவ், தான் இன்னும் தலைமைச் செயலாளராக நீடிப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். (டிசம்பர் 27)
* தனிநபர் வருமானவரி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்தினர். (டிசம்பர் 27)
* வார்தா புயல் தாக்குதலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிடுவதற்காக வந்த மத்தியக் குழுவினர் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் ஆய்வு செய்தனர். (டிசம்பர் 28)
* வார்தா புயலால் தமிழகத்துக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு மத்திய அரசுக்கு உடனே அறிக்கை வழங்க வேண்டும் என்று மத்தியக் குழுவிடம் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். (டிசம்பர் 28)
* ரொக்கமற்ற பணப் பரிமாற்றத்துக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகும் சேவை வரிவிலக்கு நீடிக்க வேண்டும் என்று முதல்-மந்திரிகள் குழு சிபாரிசு செய்தது. (டிசம்பர் 28)
* சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். (டிசம்பர் 29)
* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகங்கள் உள்ளன என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ். வைத்தியநாதன் கருத்துத் தெரிவித்தார். (டிசம்பர் 29)
* வார்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளை மத்தியக் குழுவினர் 2-வது நாளாக ஆய்வு செய்தனர். (டிசம்பர் 29)
* மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறைத் தண்டனை விதிக்க வகையும் செய்யும் அம்சத்தை அவசரச் சட்டத்தில் இருந்து மத்திய அரசு நீக்கியது. (டிசம்பர் 29)
* வங்கிகளில் ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேரின் பட்டியல் வருமான வரித்துறையினருக்குக் கிடைத்துள்ளது, கருப்புப் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என மத்திய அரசு எச்சரித்தது. (டிசம்பர் 29)
* உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் திடீரென்று நீக்கப்பட்டார். அங்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கட்சியின் தலைவர் முலாயம் சிங் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். (டிசம்பர் 30)
* புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை பதுக்கிவைத்த வழக்கில் கைதான சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கோர்ட்டு மறுத்துவிட்டது. (டிசம்பர் 30)
* ஆதார் அட்டையைப் பயன்படுத்தி கை பெருவிரல் ரேகை மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் முறை விரைவில் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். (டிசம்பர் 30)
* அருணாசல பிரதேச முதல்-மந்திரி பீமா காண்டு உள்பட 7 பேர் அருணாச்சல் மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். (டிசம்பர் 30)
* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், ரஷிய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறும்படி ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டார். (டிசம்பர் 30)
* புத்தாண்டு தினத்தையொட்டி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, விவசாயிகள், சிறு வியாபாரிகள், கர்ப்பிணிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்தார். (டிசம்பர் 31)
* அருணாசல பிரதேசத்தில் ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 33 பேர் கட்சி தாவியதால் அங்கு பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது. (டிசம்பர் 31)
* இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக பிபின் ராவத் டெல்லியில் பதவியேற்றார். (டிசம்பர் 31)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு | உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் நேற்று பதவியேற்றார். 64 வயதான ஜே.எஸ்.கேஹர், வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை சுமார் 7 மாதங்கள் இப்பதவியில் நீடிப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதியாக இருந்த டி.எஸ்.தாக்குரின் பதவிக் காலம் கடந்த 3-ம் தேதி யுடன் முடிவடைந்தது. அப்பத விக்கு நீதிபதி ஜே.எஸ்.கேஹரை நியமிக்க கடந்த மாதம் 6-ம் தேதி மத்திய அரசுக்கு நீதிபதி டி.எஸ்.தாக்குர் பரிந்துரை செய்தார். டிசம்பர் 19-ம் தேதி இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் உச்ச நீதி மன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சீ்க்கியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருப்பது இதுவே முதல்முறை. கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜே.எஸ்.கேஹர், கொலீஜியம் முறையை ஒழிக்கும் மத்திய அரசின் நீதிபதிகள் நியமனச் சட்டத்தை செல்லாது என அறிவித்த அரசியல் சாசன அமர்வுக்கு தலைமையேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2016 ஜனவரி மாதம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியதை ரத்து செய்தது, சஹாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய்க்கு சிறை தண்டனை விதித்தது போன்ற அதிரடி தீர்ப்புகளை வழங்கிய அமர்வில் ஜே.எஸ்.கேஹர் இடம் பெற்றிருந்தார். டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

tamil gk | 30.12.2016 | பொது அறிவு வினா


1) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரான அவர் 22.11.2016 அன்று மரணம் அடைந்தார். அவர் யார்?
2) 22.11.2016 அன்று இந்த நாட்டில் 6.9 ரிக்டர் அளவுப்படி பூகம்பம் ஏற்பட்டது. இதையொட்டி சுனாமி ஆபத்தும் உருவானது. அந்த நாடு எது?
3) இந்திய சரக்கு கப்பல் அமைப்பில் முதலாவதாக கேப்டனாக பணியாற்றிய இந்தியப்பெண் யார்?
4) கர்நாட இசைக்கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பிறந்த இடம் எது?
5) இந்தியாவில் உள்ள சில்லரை விற்பனைக்கடைகள் உள்ள பகுதியில் அதிக விலைவாசி உள்ள கடைகள் எங்கு அமைந்துள்ளன?
6) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட தரவரிசைப்பட்டியல்படி அதிக புள்ளிகள் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
7) இந்தியாவின் மிகப்பெரிய வாகனப்பாதை எது?
8) உலகின் உள்ள நகரங்களில் 'பட்டங்களின் நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது?
9) 'டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் நேஷனல் சென்டர் பார் பயலாஜிக்கல சயின்சஸ்' என்ற ஆய்வு அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக இருக்கிறார் உபைது சித்திக். இது சரியா, தவறா?
10) உலகின் தெற்கு மூலையில் அமைந்துள்ள நகரம் எது?
விடைகள்:-
1) பேராசிரியர் எம்.ஜி.கே.மேனன் 
2)வடகிழக்கு ஜப்பான்
3) கேப்டன் ராதிகா மேனன்
4) ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தார்.
5) புதுடெல்லியில் அமைந்துள்ள கரண் மார்க்கெட்
6) விராட்கோலி
7) லக்னோ-ஆக்ரா இடையே அமைந்துள்ள 6 வழி வாகன சாலைப்பாதை.
8) சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வெய்பிங் என்ற இடம் தான் 'பட்டங்களின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.
9) உண்மை 
10) அர்ஜன்டினாவில் உள்ள உசூயா என்ற நகரம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி


5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி ராணுவ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு | 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. அக்னி ஏவுகணைகள் ராணுவத்தின் பயன்பாட்டுக்காக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்ட நிறுவனம் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து அவற்றை பரிசோதித்து வருகிறது. குறிப்பாக நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி ரக ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்து ராணுவத்தில் இணைத்தும் இருக்கிறது. தற்போது அக்னி-1 (700 கி.மீ. இலக்கு), அக்னி-2 (2 ஆயிரம் கி.மீ. இலக்கு) அக்னி-3 மற்றும் அக்னி-4 (2,500 கி.மீ. முதல் 3,500 கி.மீ. வரையிலான இலக்கு) ஆகிய ஏவுகணைகள் இந்திய ராணுவத்திடம் உள்ளன. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ரக ஏவுகணையை தயாரித்து சோதனையில் ஈடுபடுத்தும் பணி கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. நேற்று 4-வது மற்றும் நிறைவு கட்ட சோதனை ஒடிசா மாநிலம் பலாசோர் கடற்கரை அருகே உள்ள அப்துல்கலாம் தீவில் நடத்தப்பட்டது. துல்லியமாக தாக்கியது இந்த ஏவுகணை முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே தயாரானது ஆகும். இதனால் இந்த ஏவுகணை செலுத்துவதை காண்பதற்காக அப்துல்கலாம் தீவுக்கு ஐதராபாத்தில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு ராணுவ ஆய்வகங்களின் 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வந்திருந்தனர். அவர்களின் முன்னிலையில் நேற்று காலை 11.05 மணி அளவில் அங்குள்ள ஒருங்கிணைந்த ஏவுதள மையத்தில் இருந்து நடமாடும் லாஞ்சர் மூலம் அக்னி-5 ஏவுகணை சோதனை செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடல் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. அப்போது ராணுவ விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். முன்னதாக சோதனைக்காக ஏவுகணை செல்லும் பாதையில் உள்ள பல நாடுகள் உஷார்படுத்தப்பட்டன. அதிநவீன தொழில்நுட்பம் அக்னி-5 ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலம், 50 டன் எடையும் கொண்டது. இதில் சுமார் ஒரு டன் அளவிற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இது தரையில் இருந்து கிளம்பிச் சென்று தரைவழி இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணையில் தேவைக்கு அதிகமான வழிகாட்டுதல் அமைப்பு, சக்திவாய்ந்த என்ஜின்கள், மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கும் முறை, விரைந்து செல்லும்போது கோளாறு ஏற்பட்டால் அதை கம்ப்யூட்டர் உதவியுடன் கண்டுபிடித்து தானாகவே சரி செய்து கொள்ளுதல் ஆகிய அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. 4-வது நாடு இத்தகைய நவீன தொழில் நுட்பமும் மற்றும் 5 ஆயிரம் கி.மீ. தூர இலக்கை தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளிடம் தான் உள்ளன. 3-வது கட்ட பரிசோதனையின் போதே இந்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4-வது நாடாக இணைந்து விட்டாலும் தற்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை அக்னி-5 ஏவுகணை கூடுதலாக பெற்றிருப்பது சிறப்பம்சம் ஆகும். அக்னி-5 ஏவுகணையின் மூலம் சீனாவின் வடமேற்கு எல்லைப் பகுதியையும், ஐரோப்பா கண்டத்தின் பெரும்பகுதியையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு அக்னி-5 ஏவுகணையின் நிறைவுகட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளனர். ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில், "அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இது நமது ராணுவ வலிமைக்கும், ஒடுக்கும் திறனுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது" என்றார். பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், "நமது விஞ்ஞானிகள் இதற்காக கடும்பணி ஆற்றி இருக்கின்றனர். இதற்காக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்யும் சாதனை. இதனால் நமது ராணுவத்தின் திறன் இன்னும் வலுப்பட்டு இருக்கிறது" என்று கூறி இருக்கிறார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB TET-TNPSC - STD 7 TAMIL – STUDY MATERIALS QUESTION ANSWER - J.SATHIYAMOORTHY | TRB TET-TNPSC - STD 7 TAMIL – STUDY MATERIALS QUESTION ANSWER DOWNLOAD BY J.SATHIYAMOORTHY M.Sc.,M.Phil.,B.Ed., JS TET-TNPSC ACADEMY PATTUKKOTTAI - sathiyamj@gmail.com - 9944821464

TRB TET-TNPSC - STD 7 TAMIL – STUDY MATERIALS QUESTION ANSWER - J.SATHIYAMOORTHY | TRB TET-TNPSC - STD 7 TAMIL – STUDY MATERIALS QUESTION ANSWER  DOWNLOAD BY J.SATHIYAMOORTHY M.Sc.,M.Phil.,B.Ed.,  JS TET-TNPSC ACADEMY PATTUKKOTTAI -  sathiyamj@gmail.com - 9944821464


TRB TET-TNPSC - STD 7 TAMIL – STUDY MATERIALS QUESTION ANSWER - J.SATHIYAMOORTHY | TRB TET-TNPSC - STD 7 TAMIL – STUDY MATERIALS QUESTION ANSWER  DOWNLOAD BY J.SATHIYAMOORTHY M.Sc.,M.Phil.,B.Ed.,  JS TET-TNPSC ACADEMY PATTUKKOTTAI -  sathiyamj@gmail.com - 9944821464விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிறுகதைகள் - நூலாசிரியர்


1. 100 சிறந்த சிறுகதைகள் – எஸ். ராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக் பேலஸ்
2. இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு – வீ. அரசு – அடையாளம்
3. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் – ஜெயமோகன் – கிழக்கு பதிப்பகம்
4. தமிழ் சிறுகதை களஞ்சியம் தொகுதி 1 – அ. சிதம்பரநாத செட்டியார் – சாகித்ய அக்காடமி
5. தமிழ் சிறுகதைகள் தொகுதி 2 – அகிலன் – சாகித்ய அக்காடமி
6. நவீன தமிழ் சிறுகதைகள் – சா. கந்தசாமி – சாகித்ய அக்காடமி
7. பெண் மைய சிறுகதைகள் – ரா. பிரேமா – சாகித்ய அக்காடமி
8. எனக்கு பிடித்த கதைகள் – பாவண்ணன் – திண்ணை இணைய இதழ்
9. குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை – கீரனூர் ஜாகிர் ராஜா
10. ஐம்பதாண்டு தமிழ் சிறுகதைகள் 1, 2 – சா. கந்தசாமி – கவிதா
11. புதிய தமிழ் சிறுகதைகள் – அசோகமித்ரன் – நேஷனல் புக் ட்ரஸ்ட்
12. சமீபத்திய தமிழ் சிறுகதைகள் – வல்லிக்கண்ணன், ஆ. சிவசுப்ரமணியம் – நேஷனல் புக் ட்ரஸ்ட்
13. நெல்லை சிறுகதைகள் – சு. சண்முகசுந்தரம் – காவ்யா
14. கொங்கு சிறுகதைகள் – பெருமாள் முருகன் – காவ்யா
15. தஞ்சை சிறுகதைகள் – சோலை சுந்தரப் பெருமாள் – காவ்யா
16. சென்னை சிறுகதைகள் – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
17. தில்லி சிறுகதைகள் – சீனுவாசன் – காவ்யா
18. பெங்களூர் சிறுகதைகள் – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
19. மும்பை சிறுகதைகள் – அன்பாதவன், மதியழகன் சுப்பையா – ராஜம் வெளியீடு
20. கதைக்கோவை 1 முதல் கதைக்கோவை 4 வரை – அல்லையன்ஸ்
21. ஒரு நந்தவனத் தென்றல் – இ.எஸ். தெய்வசிகாமணி – விஜயா பதிப்பகம்
22. தலை வாழை – இ.எஸ். தெய்வசிகாமணி – அன்னம் பதிப்பகம்
23. ஆகாயப் பந்தல் – எஸ். சங்கரநாராயணன் – உதயகண்ணன் வெளியீடு
24. பரிவாரம் – எஸ். சங்கரநாராயணன் – உதய்கண்ணன் வெளியீடு
25. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் – 1 முதல் 3 வரை – விட்டல்ராவ் – கலைஞன் பதிப்பகம்
26. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் – 4 முதல் 6 வரை – விட்டல்ராவ், அழகியசிங்கர் – கலைஞன் பதிப்பகம்
27. கதை அரங்கம் – மணிக்கதைகள் 1 முதல் 6 தொகுப்புகள் – மீனாட்சி புத்தக நிலையம்
28. நெஞ்சில் நிற்பவை 1, 2 – சிவசங்கரி – வானதி பதிப்பகம்
29. கரிசல் கதைகள் – கி. ராஜநாராயணன் – அன்னம் பதிப்பகம்
30. கரிசல் கருதுகள் – உதயசங்கர், லட்சுமணப்பெருமாள் – அகரம் பதிப்பகம்
31. மீதமிருக்கும் சொற்கள் – அ. வெண்ணிலா – அகநி பதிப்பகம்
32. தமிழ் சிறுகதைக் களஞ்சியம் – தமிழ்மகன் – விகடன்
33. கதாவிலாசம் – எஸ். ராமகிருஷ்ணன் – விகடன்
34. கணையாழியின் கடைசி பக்கங்கள் – சுஜாதா – உயிர்மை
35. காலத்தை வென்ற கதைகள் – குங்குமம் தோழி வலைத்தளம்
36. பெண்ணியக் கதைகள் – ரா. பிரேமா – காவ்யா
37. தலித் சிறுகதைகள் – வீழி.பா .இதயவேந்தன் – காவ்யா
38. தலித் சிறுகதை தொகுப்பு – ப. சிவகாமி – சாகித்ய அக்காடமி
39. சிறுகதை மஞ்சரி – மீ.ப. சோமு
40. சில கதைகளும் நாவல்களும் – வெங்கட் சாமிநாதன்
41. க.நா. சுப்ரமணியம் கட்டுரைகள் – தொகுப்பு காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
42. 20 ஆம் நூற்றாண்டு புதுவை கதைகள் 1, 2 – பிரபஞ்சன், பாரதி வசந்தன் – கவிதா
43. மதுரை சிறுகதைகள் – ஆ. பூமிச்செல்வம் – அன்னம் பதிப்பகம்
44. யானைச்சவாரி – எஸ். சங்கரநாராயணன் – இருவாட்சி வெளியீடு
45. கோணல்கள் – சா. கந்தசாமி – கவிதா
46. தஞ்சை கதைக் களஞ்சியம் – சோலை சுந்தரப் பெருமாள் – சிவசக்தி பதிப்பகம்
47. சிறந்த தமிழ் சிறுகதைகள் – விட்டல்ராவ் – கலைஞன் பதிப்பகம்
48. 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் சிறுகதையாசிரியர்கள் 1, 2 – சா. கந்தசாமி – கவிதா
49. அன்று தொகுதி 1, 2 – மாலன் – ஓரியண்ட் லாங்க்மென்
50. அன்புடன் – மாலன் – இந்தியா டுடே
51. ஒரு தலைமுறையின் 11 சிறுகதைகள் – மாலன், அக்ரீஷ் – வாசகன் இதழ்
52. வானவில் கூட்டம் – உதயகண்ணன் – இருவாட்சி பதிப்பகம்
53. வேர்மூலம் – பொதியவெற்பன் – ருத்ரா பதிப்பகம்
54. கணையாழி கதைகள் – அசோகமித்ரன் – பூரம் பதிப்பகம்
55. மழை சார்ந்த வீடு – உத்தம சோழன் – சத்யா பதிப்பகம்
56. சலாம் இசுலாம் – களந்தை பீர் முகம்மது – உதயகண்ணன் வெளியீடு
57. மலர்ச்சரங்கள், உயிர்ப்பு, சுடர்மணிகள் – சேதுராமன் – பாவை பப்ளிகேஷன்ஸ்
58. ஜுகல்பந்தி – எஸ். சங்கரநாராயணன் – வடக்கு வாசல் வெளியீடு
59. அமிர்தம் – எஸ். சங்கரநாராயணன், சு. வேணுகோபால் – நிவேதிதா புத்தக பூங்கா
60. காஃபிர்களின் கதைகள் – கீரனூர் ஜாகிர் ராஜா – எதிர் வெளியீடு
61. அழியாத கோலங்கள்– கீரனூர் ஜாகிர் ராஜா – ஆழி பதிப்பகம்
62. 21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் – கீரனூர் ஜாகிர் ராஜா – ஆழி பதிப்பகம்
63. இருள் விலகும் கதைகள் – விஜய மகேந்திரன் – தோழமை வெளியீடு
64. மெல்ல விலகும் பனித்திரை – லிவிங் ஸ்மைல் வித்யா – பாரதி புத்தகாலயம்
65. பாதரஸ ஓநாய்களின் தனிமை – ஆ. பூமிச்செல்வம் – அன்னம் பதிப்பகம்
66. ஈழத்து சிறுகதைகள் – சிற்பி – பாரி நிலையம்
67. ஈழத்து முற்போக்கு சிறுகதைகள் – நீர்வை பொன்னையன் – பாலசிங்கம் பதிப்பகம்
68. முற்போக்கு கால கட்டத்து சிறுகதைகள் – செங்கை ஆழியான் – பூபாலசிங்கம் பதிப்ப்கம்
69. ஈழத்து முன்னோடி சிறுகதைகள் – செங்கை ஆழியான் – பூபாலசிங்கம் பதிப்பகம்
70. ஈழத்து சிறுகதைகள் சிறப்பு மலர் – தமிழர் தகவல் பத்திரிக்கை
71. மலேசிய தமிழ் உலக சிறுகதைகள் – மாத்தளை சோமு
72. வேரும் வாழ்வும் – 1, 2, 3 – சை. பீர்முகம்மது – மித்ர வெளியீடு
73. அயலகத் தமிழ் இலக்கியம் – <a href="http://">சா. கந்தசாமி – சாகித்ய அக்காடமி
74. கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் – மாலன் – சாகித்ய அக்காடமி
75. ஈழத்து இலக்கிய மலர் -தீபம் இதழ் – 1969
76. ஈழத் தமிழ் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்
77. பனியும் பனையும் – இந்திரா பார்த்தசாரதி, எஸ் பொ
78. தமிழ்நேசன் பவுன் பரிசு பெற்ற கதைகள் – கணையாழி டிசம்பர் 2015
79. கலைகின்ற கருமேகங்கள் – பாரதிதாசன் நூற்றாண்டு போட்டி பரிசு கதைகள் மலேசியா, 1993
80. வெள்ளிப் பாதரசம் – தொகுப்பு செ. யோகநாதன் -1993
81. முகங்கள் – வி. ஜீவகுமாரன் (புலம் பெயர் வாழ்வு பற்றிய உலக தமிழ் எழுத்தாளர்களின் கதைகள்) – 2011
82. கதையியல் – க. பூரணசந்திரன் – அடையாளம்
83. சிகரம் கண்ட அமரர் சிறுகதைகள் – ஜெகாதா – செண்பகா பதிப்பகம்
84. இருபதாம் நூற்றாண்டில் சில தமிழ் சிறுகதைகள் – சந்திரகாந்தன்– செண்பகா பதிப்பகம்
85. காலச்சுவடு கதைகள் – மனுஷ்யபுத்திரன் – காலச்சுவடு
86. புதியவர்களின் கதைகள் – ஜெயமோகன் – நற்றிணை
87. மீண்டும் புதியவர்களின் கதைகள் – ஜெயமோகன் – இணய தளம்
88. சிறப்பு சிறுகதைகள் – விகடன் – 2007
89. தலித் பற்றிய கொங்கு சிறுகதைகள் – பெருமாள் முருகன் – புதுமலர் பதிப்பகம்
90. விருட்சம் கதைகள் – அழகியசிங்கர் – விருட்சம் வெளியீடு 1992
91. தீபம் கதைகள் – நா. பார்த்தசாரதி
92. புதிய சலனங்கள் – அரவிந்தன் – காலச்சுவடு
93. கண்ணதாசன் இதழ் கதைகள்
94. உயிர் எழுத்து கதைகள் – க. மோகனரங்கன் – உயிர் எழுத்து பதிப்பகம்
95. நடை இதழ் தொகுப்பு -கி.அ. சச்சிதானந்தம் – சந்தியா பதிப்பகம்
96. சிகரம் இதழ் தொகுப்பு – கமலாலயன்
97. மணிக்கொடி இதழ் தொகுப்பு – சிட்டி, அசோகமித்ரன், ப. முத்துக்குமாரசுவாமி – கலைஞன் பதிப்பகம்
98. சரஸ்வதி களஞ்சியம் – விஜயபாஸ்கரன் – பரஞ்சோதி பதிப்பகம்
99. தீபம் இதழ் தொகுப்பு – வே. சபாநாயகம் – கலைஞன் பதிப்பகம்
100. கலைமகள் இதழ் தொகுப்பு – கீழாம்பூர் – கலைஞன் பதிப்பகம்
101. கணையாழி களஞ்சியம் 1 – வே. சபாநாயகம் – பரஞ்சோதி பதிப்பகம்
102. கணையாழி களஞ்சியம் 2 – இந்திரா பார்த்தசாரதி – பரஞ்சோதி பதிப்பகம்
103. கணையாழி களஞ்சியம் 3, 4 – என்.எஸ். ஜகந்நாதன் – கலைஞன் பதிப்பகம்
104. கசடதபற இதழ் தொகுப்பு – சா. கந்தசாமி – கலைஞன் பதிப்பகம்
105. முல்லை இலக்கிய களஞ்சியம் – மு. பழநியப்பன் – முல்லை பதிப்பகம்
106. கனவு இதழ் தொகுப்பு – சுப்ரபாரதிமணியன் – காவ்யா
107. முன்றில் இதழ் தொகுப்பு – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
108. அமுதசுரபி இதழ் தொகுப்பு (தமிழ் சுரபி) – விக்கிரமன் -இலக்கிய பீடம்
109. அன்னம் விடுதூது கதைகள் – கதிர் – அன்னம் பதிப்பகம்
110. சுபமங்களா இதழ் தொகுப்பு – இளையபாரதி – கலைஞன் பதிப்பகம்
112. இலக்கிய வட்டம் இதழ் தொகுப்பு – கி.அ. சச்சிதானந்தம் – சந்தியா
113. ஞானரதம் இதழ் தொகுப்பு – வே. சபாநாயகம் – எனி இந்தியன் பதிப்பகம்
114. சொல்லில் அடங்காத வாழ்க்கை – தேவிபாரதி – காலச்சுவடு
115. தொப்புள் கொடி – திலகவதி – அம்ருதா பதிப்பகம்
116. சேரநாட்டு சிறுகதைகள் – திருவனந்தபுரம் தமிழ் சங்கம்
117. மனஓசை கதைகள் – சூரியதீபன் – தோழமை வெளியீடு
118. புதிய தமிழ் இலக்கிய வரலாறு – க. சண்முகசுந்தரம் – சாகித்ய அக்காடமி
119. தமிழ் சிறுகதை பிறக்கிறது – சி.சு. செல்லப்பா – காலச்சுவடு
120. குருஷேத்திரம் தொகுப்பு – நகுலன்
121. தென்னிந்திய சிறுகதைகள் – கே.வி. ஷைலஜா – வம்சி புக்ஸ்
122. வல்லமை சிறுகதைகள் – தாரிணி பதிப்பகம்
123. சிறகிசைத்த காலம் – வே. நெடுஞ்செழியன், பவா செல்லதுரை – வம்சி புக்ஸ்
124. பார்வைகள் – அசோகமித்ரன் – நற்றிணை பதிப்பகம்
125. சிக்கி முக்கி சிறுகதைகள் – தாரா கணேசன் – புதுமைப்பித்தன் நூலகம்
126. காக்கைகள் துரத்தி கொத்தும் தலைக்குரியவன் – மாதவராஜ் – வம்சி புக்ஸ்
127. ஆர்வி, கேசவமணி, நிலாரசிகன், அ.மு. செய்யது, அருண் தமிழ் ஸ்டுடியோ, இமயம், சென்ஷி – இவர்களின் இணய தள பதிவுகள்.
128. சிறுகதை இலக்கிய வளர்ச்சியில் வடக்கு வாசல் – அ. இராஜசேகர் – ஸ்ரீபாரதி புத்தகாலயம்
129. உலகத் தமிழ் இலக்கிய வரலாறு – (1851-2000 வரை) – ராம. குருநாதன் கட்டுரை
130. தொடரும் வெளிச்சம் – குமரி பதிப்பகம் – 1995
131. வானதி சிறப்பு சிறுகதைகள் 1 – மகரம் – வானதி பதிப்பகம்
132. Selected Tamil Short stories by Rajendira Awasthi
133. A Place to live – Edited by Dilip Kumar – Tamil Stories- Penguin books

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிறுகதைகள் - நூலாசிரியர்


சிறுகதைகள் - நூலாசிரியர்

1. தனுமை – வண்ணதாசன் – 16

2. விடியுமா? – கு.ப. ராஜகோபாலன் – 16

3. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் – 15

4. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை – 14

5. அழியாச்சுடர் – மௌனி – 14

6. எஸ்தர் – வண்ணநிலவன் – 14

7. புலிக்கலைஞன் – அசோகமித்ரன் – 14

8. மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி – 14

9. நகரம் – சுஜாதா – 14

10. சிலிர்ப்பு – தி. ஜானகிராமன் – 13

11. நட்சத்திரக் குழந்தைகள் – பி.எஸ். ராமையா – 12

12. ராஜா வந்திருக்கிறார் – கு. அழகிரிசாமி – 12

13. அக்னிப்பிரவேசம் – ஜெயகாந்தன் – 11

14. குளத்தங்கரை அரசமரம் – வ.வே.சு. ஐயர் – 11

15. நாயனம் – ஆ. மாதவன் – 10

16. சாபவிமோசனம் – புதுமைப்பித்தன் – 10

17. வெயிலோடு போய் – ச. தமிழ்ச்செல்வன் – 10

18. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன் – 9

19. கன்னிமை – கி. ராஜநாராயணன் – 9

20. கோயில் காளையும் உழவு மாடும் – சுந்தர ராமசாமி – 9

21. சாசனம் – கந்தர்வன் – 9

22. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி – 9

23. தோணி – வ.அ. ராசரத்தினம் – 9

24. பல்லக்கு தூக்கிகள் – சுந்தர ராமசாமி – 9

25. புற்றில் உறையும் பாம்புகள் – ராஜேந்திர சோழன் – 9

26. மூங்கில் குருத்து – திலீப்குமார் – 9

27. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி – 9

28. விகாசம் – சுந்தர ராமசாமி – 9

29. ஆற்றாமை – கு.ப. ராஜகோபாலன் – 8

30. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் – வேல. ராமமூர்த்தி – 8

31. ஒரு இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன் – 8

32. கடிதம் – திலீப்குமார் – 8

33. கதவு – கி. ராஜநாராயணன் – 8

34. பாயசம் – தி. ஜானகிராமன் – 8

35. பிரசாதம் – சுந்தர ராமசாமி – 8

36. மதினிமார்களின் கதை – கோணங்கி – 8

37. ஒரு ஜெருசலேம் – பா. செயப்பிரகாசம் – 7

38. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் – ஆதவன் – 7

39. செல்லம்மாள் – புதுமைப்பித்தன் – 7

40. திசைகளின் நடுவே – ஜெயமோகன் – 7

41. நாற்காலி – கி. ராஜநாராயணன் – 7

42. நிலை – வண்ணதாசன் – 7

43. பத்மவியூகம் – ஜெயமோகன் – 7

44. பாற்கடல் – லா.ச. ராமாமிர்தம் – 7

45. பிரபஞ்சகானம் – மௌனி – 7

46. பிரயாணம் – அசோகமித்ரன் – 7

47. மீன் – பிரபஞ்சன் – 7

48. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை – அம்பை – 7

49. வெள்ளிப் பாதரசம் – இலங்கையர்கோன் – 7

50. அம்பலக்காரர் வீடு – பா. செயப்பிரகாசம் – 6

51. அன்பளிப்பு – கு. அழகிரிசாமி – 6

52. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதிமணியன் – 6

53. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி – 6

54. கனகாம்பரம் – கு.ப. ராஜகோபாலன் -6

55. கயிற்றரவு – புதுமைப்பித்தன் – 6

56. காஞ்சனை – புதுமைப்பித்தன் – 6

57. காற்று – கு. அழகிரிசாமி – 6

58. கேதாரியின் தாயார் – கல்கி – 6

59. சரஸாவின் பொம்மை – சி.சு. செல்லப்பா – 6

60. சாமியார் ஜூவுக்கு போகிறார் – சம்பத் – 6

61. சுயரூபம் – கு. அழகிரிசாமி – 6

62. திரை – கு.ப. ராஜகோபாலன் – 6

63. தேர் – எஸ். பொன்னுதுரை – 6

64. நசுக்கம் – சோ. தர்மன் – 6

65. பற்றி எரிந்த தென்னை மரம் – தஞ்சை பிரகாஷ் – 6

66. பாற்கஞ்சி – சி. வைத்திலிங்கம் – 6

67. பிரும்மம் – பிரபஞ்சன் – 6

68. பைத்தியக்காரப் பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம் – 6

69. அரசனின் வருகை – உமா வரதராஜன் – 5

70. ஆண்களின் படித்துறை – ஜே.பி. சாணக்யா – 5

71. இழப்பு – ந. முத்துசாமி – 5

72. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன் – 5

73. ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன் – 5

74. ஒரு பிடி சோறு – கனக செந்திநாதன் – 5

75. கடிகாரம் – நீல. பத்மநாபன் – 5

76. கரையும் உருவங்கள் – வண்ணநிலவன் – 5

77. கனவுக்கதை – சார்வாகன் – 5

78. கற்பு – வரதர் – 5

79. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்ரன் – 5

80. ஜன்னல் – சுந்தர ராமசாமி – 5

81. சாவித்திரி – க.நா. சுப்ரமணியம் – 5

82. சாவில் பிறந்த சிருஷ்டி – மௌனி – 5

83. ஞானப்பால் – ந. பிச்சமூர்த்தி – 5

84. திரிவேணி – கு. அழகிரிசாமி – 5

85. தேடல் – வாஸந்தி – 5

86. நீர்மை – ந. முத்துசாமி – 5

87. நூருன்னிசா – கு.ப. ராஜகோபாலன் – 5

88. பள்ளம் – சுந்தர ராமசாமி – 5

89. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா – 5

90. மரப்பாச்சி – உமாமகேஸ்வரி – 5

91. மேபல் – தஞ்சை பிரகாஷ் – 5

92. யுகசந்தி – ஜெயகாந்தன் – 5

93. விஜயதசமி – ந. பிச்சமூர்த்தி – 5

94. ஜன்னல் – சுஜாதா – 5

95. அண்ணாச்சி – பாமா – 4

96. அந்நியர்கள் – ஆர். சூடாமணி – 4

97. அப்பாவின் பள்ளிக்கூடம் – ந. முத்துசாமி – 4

98. அரும்பு – மேலாண்மை பொன்னுச்சாமி – 4

99. ஆண்மை – ஜி. நாகராஜன் – 4

100. ஆனைத்தீ – தொ.மு.சி. ரகுநாதன் – 4

101. இருட்டில் நின்ற – சுப்ரமண்ய ராஜு – 4

102. உயிர்கள் – சா. கந்தசாமி – 4

103. எதிர்பார்ப்புகள் – ராஜேந்திர சோழன் – 4

104. ஏழு முனிக்கும் இளைய முனி – சி.எம். முத்து – 4

105. கரிசலின் இருள்கள் – பா. செயப்பிரகாசம் – 4

106. காணி நிலம் வேண்டும் – கோபிகிருஷ்ணன் – 4

107. காசுமரம் – அகிலன் – 4

108. காடன் கண்டது – பிரமிள் – 4

109. காட்டில் ஒரு மான் – அம்பை – 4

110. கோணல் வடிவங்கள் – ராஜேந்திர சோழன் – 4

111. கோமதி – கி. ராஜநாராயணன் – 4

112. சட்டை – கிருஷ்ணன் நம்பி – 4

113. சித்தி – மா. அரங்கநாதன் – 4

114. சிறகுகள் முறியும் – அம்பை – 4

115. சிறிது வெளிச்சம் – கு.ப. ராஜகோபாலன் – 4

116. செவ்வாழை – அண்ணாதுரை – 4

117. சேதாரம் – தனுஷ்கோடி ராமசாமி – 4

118. தண்ணீர் தாகம் – ஆனந்தன் – 4

119. தத்துப்பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம் – 4

120. துறவு – சம்பந்தர் – 4

121. தொலைவு – இந்திரா பார்த்தசாரதி – 4

122. நதி – ஜெயமோகன் – 4

123. நான் இருக்கிறேன் – ஜெயகாந்தன் – 4

124. நிலவிலே பேசுவோம் – என்.கே. ரகுநாதன் – 4

125. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன் – 4

126. பலாப்பழம் – வண்ணநிலவன் – 4

127. பறிமுதல் – ஆ. மாதவன் – 4

128. பதினெட்டாம் பெருக்கு – ந. பிச்சமூர்த்தி – 4

129. புனர் – அம்பை – 4

130. புயல் – கோபிகிருஷ்ணன் – 4

131. புவனாவும் வியாழக்கிரகமும் – ஆர். சூடாமணி – 4

132. பொன்னகரம் – புதுமைப்பித்தன் – 4

133. மரி என்கிற ஆட்டுக்குட்டி –பிரபஞ்சன் – 4

134. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார் இந்திரஜித் – 4

135. மிருகம் – வண்ணநிலவன் – 4

136. மீன்கள் – தெளிவத்தை ஜோசஃப் – 4

137. முள் – பாவண்ணன் – 4

138. முள்முடி – தி. ஜானகிராமன் – 4

139. ரீதி – பூமணி – 4

140. வண்டிச்சவாரி – அ.செ. முருகானந்தம் – 4

141. வாழ்வும் வசந்தமும் – சுந்தர ராமசாமி – 4

142. விதை நெல் – ந. பிச்சமூர்த்தி – 4

143. விரித்த கூந்தல் – சுரேஷ்குமார் இந்திரஜித் – 4

144. வெறுப்பைத் தந்த வினாடி – வத்ஸலா – 4

145. வேட்டை – யூமா வாசுகி – 4

146. வேனல் தெரு – எஸ். ராமகிருஷ்ணன் – 4

147. வைராக்கியம் – சிவசங்கரி – 4

148. ஜனனி – லா.ச. ராமாமிர்தம் – 4

149. ஜின்னின் மணம் – நீல. பத்மநாபன் – 4

150. ஹிரண்யவதம் – சா. கந்தசாமி – 4

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE